அளவற்ற அருளாளன் நிகற்ற அன்புடையோன எல்லா புகழ் அனைத்தும் அல்லாவிற்க்கே


About Me

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ

..

என்னைப் பற்றி சொல்லிக் கொள்ளும் அளவு நான் ஒரு சாதனையாளன் இல்லை நான் விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி வட்டம் தண்டலை கிராமத்தில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியரான என் தந்தை முகமது முஸ்தபாவிற்க்கும் தாய் சைதபிக்கும் எட்டாவது பிள்ளையாக 17-06-1952ல் பிறந்தேன் என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் பத்து பேர் நான் பள்ளி படிப்பைத் தவிர பல்கலைக் கழகத்தில் இளங் கலையோ முது கலையோ படித்தவன் இல்லை இருந்தாலும் தமிழின்பால் தமிழ் இலக்கியத்தின்பால் நாட்டம் அதிகம் என் தந்தை குரானையும், ஹதிஸையும் நன்ங்கு அறிந்தவர் எனக்கு இளம் வயதில் மார்க்க கல்வியில் அதிகம் நாட்டம் இல்லாமல் இருந்தேன் ஆனால் என் முத்த மகன் பிறந்ததிலிருந்து எனக்கு இஸ்லாத்தின்பால் நாட்டம் அதிகமானது பொதுவாக கிராமத்தில் சொல்வார்கள் எட்டாவதாகப் பிறந்தவர்கள் வெட்டி அரசு ஆள்வார்கள் என்று ஆனால் யாரையும் வெட்டி அரசாள வரவில்லை ஆனால் என் காதுக்கு எட்டியதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்பதால் மட்டுமே இந்த வலைப் பக்கத்தை தொடங்கி உள்ளேன் இதில் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவு செய்து இந்த வலை பக்கத்திற்கு ஆதரவு நல்கிடிவீர்.

இவ் வலை பக்கத்தை வலம் வந்தவர்கள்

IP Address

Enna Kirukkalgal

Video


Video

Title

Video

Title

Video

Title

Video

Title

Photo


Blog

ஓட்டு பதிவு 

தற்போதய மோடியின் அரசு நம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வதாக ஒவ்வொரு முறையும் சொல்லி நம் நாட்டில் Make in India, Digital Currency,  Demonstration, GST என்று பல புரட்சி திட்டங்களை செயல் படுத்துவதற்காக சொல்பவர் கவனத்திற்கு இப்போது நம் நாட்டில்  Smart Cards என்பது ரேஷன் கடை, வாகன ஓட்டுனர் உரிமம் மேலும் பஸ் டிக்கட்ரயில் டிக்கட் என்று Cash less Economy யாக முயற்சி செய்யும்  இவர்கள்   நம் நாட்டு Smart அரசியல்வாதியை தேர்ந்தெடுக்க ஒரு Smart card க உபயோகிக்க தற்போது உள்ள Adar Cards லே ஒரு சில மாற்றங்கள் செய்து அதையே Smart  Voters  Cardsக பயன்படுத்தலாம் ஏன் என்றால் Adar Cardல் ஒரு தனி மனித பிறந்த தேதி, அவர் எந்த மாநில, மாவட்ட எந்த  தொகுதி  பிறந்த ஊர், தாய் தந்தையின் பிள்ளை  என்றெல்லாம்  உள்ள  Adar ல் உள்ள விபரங்களை காண முடிகிறது எனவே அதில் சில மாற்றம் செய்து  Smart   Voters Cardsக மாற்றம் செய்தால் வாக்காளருக்கு  என்ன என்ன  நன்மைவேட்பாளருக்கு நன்மை, அரசாங்கத்திற்கு நன்மை என்று எண்ணி  பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும்

 

ஒரு வேளை தலைமை தேர்தல் ஆணையம் Smart Voters Cardsஐ  பயன்படுத்தினால் நூறு சதவீதம் வாக்கு பதிவாகும் மேலும் தேர்தல் முறைகேடுகள் களைய படும் எப்படி என்றால் தற்போது உள்ள ஆதர் கார்டில் ஐ(கண்விழி) ஸ்கேன், Fingers Scene) கைரேகை ஸ்கேன், ஆதார் எண், பிறந்த தேதி, பெற்றோர்கள் பெயர் ஆகியவற்றை ஆதார் கார்டை வாக்காளர் அட்டையில் இணைத்து மேலும் சில மாற்றங்கள் செய்து ஒரு Smart Voters Cardsஐ செய்து தந்தால் தேர்தல் நாள் அன்று வாக்காளர்கள் தம் தம் வேலை செய்யும் இடத்திலேயே அல்லது அருகிலுள்ள வாக்காளர் மைய்யதிலோ தம் வாக்கை பதிவு செய்ய முடியும் மேலும் ரயில்களில் அல்லது கார், பஸ் மூலம் பயணம் செய்பவர்கள் கூட அவர்களது வாக்கை அருகாமையில் உள்ள வாக்காளர் மைய்யத்தில் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் ஆதாருடன் இணைந்த Smart Voters Card ல் Eye Scene, Fingers Scene இருப்பதால் கள்ள ஓட்டு போட இயலாது மற்றும் Booths Capturing நடக்க வாய்ப்பில்லை தேர்தலுக்கான செலவுகள் குறையும் மேலும் வாக்களர் எந்த வேட்பாளருக்கு தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் என்பதையும் தன்னுடைய அந்தரங்கத்தில் வைத்து கொள்ள முடியும் இன்னும் பல வசதிகள் இருப்பதால் நம் தேர்தல் ஆணையத்தில் மேல் உள்ள களங்கமும் நீங்கும்

 

ஆனால் இவை எல்லாம் எந்தவொரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ளமாட்டார்கள் ஏன் என்றால் அப்படி செயல்படுத்தினால் ஆட்சியாளர்கள் கைபாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட முடியாது எனவே நம் நாடு சுதந்திர ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ள முடியாது .எனவே  ஆட்சியாளர்கள் இத்தகைய ஒரு முயற்சியை மேற்க் கொண்டால் நம் நாட்டை நல்ல ஒரு ஜனநாயக நாடு என்று பெருமை கொள்ளலாம்.

All Comment

அபுபக்கர்

அருமை இப்போது உள்ள நிலையில் மிக அவசியமான கருத்து நம்மவர்கள் சிந்திக்க வேண்டும்

Write Comment


Name
:
Image Upload
:


***************************
படித்ததில் ரசித்தது கேட்டதில் ரசித்தது

ஒரு முறை பேரறிஞர் அண்ணாவும் நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் மூவரும் சிதம்பரித்தில் அண்ணாமலை பல்கலை கழகத்தில் உரையாட ஒரு காரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள் பொதுவாகவே அறிஞர் அண்ணா அவர்கள் உடை அலங்கரித்து அணிவதில் அதிக நாட்டம் இல்லாதவர் அப்போது அவர் அணிந்து இருந்த சட்டையில் ஒரு சில பொத்தான் இல்லாததால் அதைச் சீர் செய்ய காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த நெடுஞ்செழியனிடம் சட்டையை சீர் செய்ய தம்பி பின்(Pin) இருந்தால் தா என்று இயல்பாகக் கேட்க அதற்கு நெடுஞ்செழியனும் அவருக்கே உறிய நகச்சுவையுடன் அண்ணா தம்பிகளிடமே பின் வாங்கலாமா என்று குத்தலாக கேட்க அதற்கு அறிஞர் அண்ணாவும் அவருக்கே உறிய தொனியில் என்ன செய்ய தம்பிகள் என்னைச் சரியான படியில் ஊக்குவித்திருந்தால் நான் ஏன் தம்பிகளிடம் பின் வாங்கப் போகிறேன் என்று சொன்னவுடன் அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டார்கள் 1967ல் முதன் முறையாக காங்ரஸை தேர்தலில் தோற்கடித்து அறிஞர் அண்ணா தலைமையில் அரசு அமைக்கப் பட்டது அப்போது பொதுப்பணி அமைச்சர் இருந்த கலைஞர் சட்டசபையில் பெசிய பேச்சுகள் எல்லாம் தமிழின் தனித் தன்மைகளை பறைசாற்றும் விதமாக அமைந்திறிந்த்து என்பதற்கு ஒரு நிகழ்ச்சி எதிர்கட்சி காங்ரஸ் உறுப்பினர் அனந்தநாயகி இந்து அறநிலை சார்பாக ஒரு கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த கலைஞர் அவர்கள் தனி தமிழை எவ்வாறு கையாண்டு பதில் உறைத்தார் என்பதைச் சட்டசபை குறிப்பில் காணலாம் அறநிலை சார்பாக கேட்ட கேள்விக்குப் பதில் உறுப்பினர் மேஜையில் மேல் ஒரு கோப்பு வைக்கப்பட்டிருந்தது அதற்குக் கலைஞர் அவர்கள் சொன்னார் மேஜையில் மேல் ஒரு கோப்பை திறக்க முன் இறுக்கும் நாடாவை அவிழ்த்து பாவாடையை திறந்து பார்த்தால் விளக்கம் தெறியும் சொன்னவுடன் உறுப்பினர் அனந்தநாயகியின் முகம் கோவத்தால் சிவந்து போனது பிறகு கலைஞர் நான் ஏதும் தவறாக பொருள்படச் சொல்லவில்லை என்று சொல்லி விளக்கம் தந்தார் மேஜையில் இறுக்கும் கோப்பின் மேல் உள்ள நாடாவை அவிழ்த்து கோப்பை ( பாவாடையை ) திறந்து பார்த்தால் விளக்கம் தெரியும் என்றுதான் சொன்னேன் என்றவுடன் அவையில் அமர்ந்திருந்த உறுப்பினர் அனைவரும் சிரித்து விட்டார்கள் புலவர் ராமலிங்கம் சொன்னார் ஒரு விவசாயி பெயர் அடைகலசாமி என்பவர் விவசாயத்திற்காக வங்கியில் தனக்கு தெரிந்த மேலாளர் மூலம் கடன் வாங்கி உள்ளார் நீண்ட நாள் ஆகியும் கடனை அடைக்காததால் வங்கியின் மேலாளர் விவசாயிடம் கேட்டார் வங்கியில் வாங்கிய கடனை அடைத்து விட்டாயா என்றதிற்கு விவசாயிம் அடைகலசாமி என்றதும் மேலாளருக்கு புது குழப்பம் வந்தவுடன் மறுபடியும் கேட்டார் நான் உன் பெயரை கேட்கவில்லை கடனைத்தான் கேட்டேன் என்றதற்கும் ஆமாம் அடைகலசாமி என்றவுடன் வங்கி மேலாளர் தன் கவலை மறந்து சிரித்தார் அதைப் போல யாரிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பதை விளக்கினார் உதாரணமாக குழந்தையிடம் பேசுவது என்றால் குழந்தைக்கு புரியும்படி பேச வேண்டும் ஒரு குடிகாரனிடம் பேசுவது என்றால் குடிகாரன் விளங்கிக் கொள்ளும்படி பேச வேண்டும் என்று சொல்லி கொண்டு வந்தார் ஒரு நாள் ஒரு சவப்பெட்டி செய்யும் தொழிலாளிக்கு ஒரு சவப்பெட்டி செய்ய சொல்லி இருந்தார் ஒருவர் அந்த சவப்பெட்டி தொழிலாளியும் சவப்பெட்டி தயார் செய்து அதை காரில் எடுத்துக் கொண்டு வர இரவு வெகு நேரம் ஆகிவிட்டது மேலும் அவருடைய கார் நடு வழியில் நின்று போனதால் அவரும் தன் கடமை உணர்ச்சியுடன் சவப்பெட்டியை செய்ய சொன்னவரிடம் ஒப்படைத்து விட வேண்டுமென்று சவப்பெட்டியை தலையில் சுமந்தபடி நடந்தார் அப்போது எதிரில் ஒரு போலிஸ் நடு இரவில் சவப்பெட்டியை தலையில் சமந்தபடி செல்லும் நபரிடம் 100, 200 வசுலித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வழிமறித்து யார் நீ இந்த நேரத்தில் எங்கு போகிறாய் என்றவுடன் சமயோஞன புத்தியால் அய்யா என்னைப் புதைத்த இடத்தில் புழுக்கம் தாங்க முடியவில்லை அதனால்தான் காற்றோட்டம் உள்ள இடம் தேடி வேறு இடம் செல்கிறேன் என்று சொன்னதை கேட்டு போலிஸ்காரர் அதே இடத்தில் மயக்கம் அடைந்து சாய்ந்தார் என்று கேட்டதை நான் எண்ணி எண்ணிச் சிரித்தேன் நன்றி மீண்டும் சந்திக்கலாம்

All Comment

Write Comment


Name
:
Image Upload
:


***************************
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு

இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு எத்தனை மகத்தானது என்பதை பலரும் அறியாத ஒன்று அதை விட மேலாக சிறுபான்மை என்று நினைக்கும் பெரும்பான்மை சமூகத்தினராகிய முஸ்லீம் சமுகமே அறியாத ஒன்று ஏன் என்றால் வேண்டும் என்றே சரித்திரத்தில் ஆங்கிலேயன் முஸ்லீம் சுதந்திர போராட்டத்தை வேண்டும் மென்றே மறைத்தான் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹைதர் அலி அவர் மகன் மாவீரன் திப்பு சுல்தான் ஆகியோர் வெள்ளையனை எதிர்த்தது எல்லாம் நாடறிந்த வரலாறு ஆனால் இப்போது உள்ள ஆட்சியாளர்கள் வேண்டும் என்றே வரலாற்றை திருத்தி மறைத்து உள்ளார்கள் முதன் முதலாக 1856 ஆண்டு வேலூரில் இருந்து சிப்பாய்கள் கலவரம் ஏற்பட்டதுக்கு காரணமாக இருபதுக்கு காரணம் ஆங்கிலேயன் என்பில்ட் என்கிற தோட்டாவை இராணுவத்தில் பயன் படுத்தும் சொன்ன போது இராணுவத்தில் பணி புரிந்து முஸ்லீம், ஹிந்து சமூகத்தவர் இடையே ஒரு கருத்து நிலவியது என்பில்ட் தோட்டாவில் பன்றி இறைச்சி கொழுப்பும் மற்றும் மாட்டு இறைச்சி கொழுப்பு இருப்பதாக நிலவிய கருத்தால் பன்றி கொழுப்பு இருப்பதால் பன்றி எங்களுக்கு ஹராம் என்றும், ஹிந்துக்கள் மாடு எங்களுக்கு புனிதம் என்பதால் நாங்கள் என்பில்ட் தோட்டாவை இராணுவத்தில் பயன்படுத்த முடியாது என்று மறுத்ததினால் அவர்களில் 83 பேரை கடுங்காவல் தண்டனை வழங்கி கடும் வேதனைக்கு உட்படுத்த பட்டார்கள் இதை கண்டு இந்தியாவில் உள்ள அனைத்து இராணுவத்தால் உள்ள அனைத்து இராணுவ வீரர்கள் எல்லோரிடமும் எதிர்பு. கிளம்பியதால் ஆங்கிலேயர்களால் எதிர்பை சமாளிக்க முடியாமல் திணரினர் இந்த ஒன்றுதான் முதன் முதலாக சுதந்திர இயக்கத்திற்கு வித்தாக அமைந்தது இந்த அவமானத்தை பொருத்து கொள்ளாத முடியாத ஆங்கிலேயர்கள் கலவரத்துக்கு காரணமாக இருந்த்தாக கருதப்பட்ட மொகலாய அரசின் கடைசி மன்னரான பகதூர் ஷாவை இந்தியாவில் இருந்து பர்மா நாடு கடத்தப்பட்டார் மேலும் அவருடைய வாரிசான இரண்டு 12,8 வயது ஆண் பிள்ளைகளை தலையை வெட்டி அவரிடமே அனிப்பி வைத்தனர் அப்போதும் அவர் தன் பிள்ளைகள் இறந்ததற்க்காக கவலை கொள்ளாமல் தான் பிறந்து, வளர்ந்து தன் சொந்த நாட்டில் இறக்காமல் அன்னிய நாட்டில் இறக்க போகிறோம் என்றுதான் கவலை கொண்டார் பொதுவாகவே மொகலாய மன்னர்கள் ஹிந்து சமுதாயத்தினர் அடிமை படுத்தி கொடுங்கோல் ஆட்சி செய்து இங்குள்ள வளத்தை சுரண்டி கொண்டு சென்றார்கள் மேலும் வாளால் இஸ்லாம் மதத்தை பரப்பினார்கள் என்று வரலாற்றை மாற்றி எழுதி உள்ளார்கள் ஆனால் உண்மை நிலை வேறு அவர்கள் ஆட்சி செய்த போது எல்லா அரசர்கள் போல உல்லாசமாக வாழ்ந்தார்கள் என்பது உண்மை அதே சமயத்தில் பெரும்பான்மை ஹிந்து சமையத்தவர்களுக்கு கோயிலுக்கு என்று பல நூறு ஏக்கர்கள் கோயில்களுக்கு தானமாக தந்தார்கள் மற்றும் மக்களுக்கு நீர் நிலைகள், சாலைகள் என்று அமைத்து தந்தார்கள் பெரும்பான்மையான சமுதாயத்திற்கு சிறுபான்மை சமுதாய அரசர்கள் ஆட்சி செய்வது என்பது எல்லா மக்களிடம் நல்ல மதிப்பு கொண்டு இருந்ததால் மட்டுமே 800 ஆண்டுகள் தொடர்ந்து நல்ல ஆட்சி தந்திருக்க முடியும் இல்லை என்றால் பெரும்பான்மையான சமுதாயம் சிறுபான்மை அரசர்களை 8 ஆண்டுகள் கூட ஆள அனுமதித்து இருக்காது ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் வேண்டுமென்றே வரலாற்றை திருத்தி எழுதி உள்ளார்கள் மாற்றாக ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்து கொள்ள அனுமதி கேட்டு பிறகு சிறுக சிறுக நம் நாட்டை அடிமை படுத்தி கொண்டார்கள் பொதுவாகவே நம்மில் பலருக்கு வெள்ளை தோல் உள்ளவனிடம் ஈர்ப்பு அதிகம் அவன் சொல்லுவது உண்மையாகத்தான் இருக்கும் என நம்பிக்கை கொண்டவர்கள் பலர் உள்ளனர் இதனை பயன்படுத்தி அவன் நம்மை பிரித்து ஆள்வது என்று முடிவு செய்து முஸ்லீம் மக்களை தவறாகவே சித்தரித்து வந்துள்ளான் மேலும் நம் நாட்டு வளங்கள் அனைத்தையும் கொள்ளை அடித்தான், அவனுடைய கலாச்சார பழக்கத்தை எல்லாம் நம் கலாச்சாரத்தை நீக்க செய்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற செய்தான் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் வித விதமான அனாச்சாரங்களை விதைத்து சென்றதினால் நம்முடைய இளய்ய சமுதாய நிலை முற்றிலும் மாறுபட்ட ஒரு வழி வகுத்தது சென்றான் 800 ஆண்டுகளாக ஆட்சி செய்த மொகலாய மன்னர்கள் ஆட்சி செய்த சமயத்தில் ஆட்சியின்மீதோ, அரசர்கள் மீதோ எந்த ஒரு குறையும் கண்டதில்லை மாறாக பெரும்பான்மையான மக்களுக்கு சுதந்திர வேட்க்கை வந்ததில்லை மேலும் மொகலாய மன்னர்கள் அரசபையில் மந்திரிகள், படை தளபதிகள், மெய்காவலர்கள் என்று பல பதவியை வகித்து வந்தார்கள் இதை காண சகிகாத ஆங்கிலயன் இரு சமுதாயத்தில் வேற்றுமை விதை விதைத்து கொண்டே இருந்தான். காந்தி அவர்கள் ஆங்கிலேயனிடம் ஒத்துழவான்மை இயக்க போராட்டத்தில் ஹிந்து சமுதாயத்தை விட முஸ்லீம் சமுதாய மக்கள்தான் பெறும் ஆதரவு தந்தார்கள் நம்முடைய குடியரசு தலைவராக இருந்த ஜாகிர் உசேன் அவர்களை BA படித்து கொண்டு இருந்த சமயத்தில் ஒத்ததுழவான்மையில் ஈர்க்கப்பட்டு அவரது கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு அவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலேய அரசக்கு எதிராக போராடினார் மேலும் காந்தி அவர்கள் சொன்னதிற்க்கு இணங்க காயிதேமில்லத் இஸ்மாயில் சாயபு அவர்களும் ஒத்துழவாது இயக்கத்தில் இணைந்து போராட துவங்கினார் மேலும் திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் ஸ்தாபகர் ஜமால் முகமது மரக்காயர் அவர்களிடத்தில் மூதரிஞ்சர் இராஜகோபால அச்சாரியாரும், காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் நாங்கள் இன்குலாப் போன்ற ஒரு போராட்டம் செய்ய உங்களிடம் சில பொருளாதார உதவி தந்து் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படி கோட்டத்திற்கு இனங்க ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பபட வேண்டும் என்ற ஆர்வத்தில் எவ்வளவு தொகை என்று கூட கேட்க்காமல் தன்னிடம் உள்ள பிளாங்க் செக்கை கொடுத்து உங்களுக்கு தேவையான எடுத்து கொள்ளுங்கள் என்று தன் நாடு விடுதலை பெறவேண்டும் என்று உறிதியாய் இருந்தார்கள் மேலும் நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையனுக்கு எதிராக ஆயித புரட்சி செய்ய பொருளாதாரம் தேவைப்படும் பட்சத்தில் அதற்கான நிதி உதவியை வள்ளல் வஹாப் என்பவர் கொடுத்து உதவினார் மேலும் நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸின் படை தளபதி ஷாநவாஸ் கான் என்பரை எத்தனை பேர் அறிந்து இருப்பார்கள் அதைவிட மேலாக நம் தமிழ்நாட்டில் கப்பலோட்டிய தமிழர் வா.வு.சிதம்பரனார் பிள்ளை ஆங்கிலேய அரசுக்கு எதிராக சுதேச இயக்கம் ஆரம்பித்து கப்பல் வாங்க முடிவு செய்து அப்போதைய பாரதியார் செய்திதாளான சுதேசமித்திரனில் அதற்கான விளம்பரம் செய்தும் யாரும் ஆதரவு தராத நிலையில் காயல் பட்டினத்தை சார்ந்த பக்ரி மொகமத் என்ற இஸ்லாமியர் இரண்டு லட்சம் வரை உதவினார் என்கிற செய்திகள் எந்த ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றில் இடம்பெற்று உள்ளதா? மேலும் கப்பலோட்டிய தமிழன் என்று சொல்ல கூடிய வ. வு .சிதம்பரம் வெள்ளையனுக்கு எதிராக கப்பல் கம்பனியை தனியாக நடத்தியதாக பலர் தவறாக நினைத்து கொண்டு இறுக்கிரார்கள் இப்படியாக பல தவறுகள் வரலாற்றில் வேண்டும் என்றே மறைக்க பட்டுள்ளது. RSS தலைவர்கள் கோல்வால்கர், வீர் சாவ்ரேக்கர் இருவரும் அந்தமான் சிறையில் இருக்கும் போது இனி விடுதலை போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று மன்னிப்பு கடிதம் கொடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள்தான் மேலும் வங்காளத்தை சேர்ந்த அறிவிந்த கோஷ் என்பவர் ஏன் நாம் தேசிய கவி பாரதியாரே ஆங்கிலேயனுக்கு பயந்து புதுச்சேரியில் தலைமறைவாக வாழ்தவர்தான் ஏதோ ஹின்து தத்துவ கொள்கை உள்ளவர்கள் ஏதோ இவர்கள் மட்டும்தான் சுதந்திர போராட்டத்தில் இவர்களுக்கு மட்டும்தான் பங்கு உண்டு என்று சொல்லிக் கொள்வது விந்தையிலும் விந்தை இத்தனை மகத்தவம் நம்மில் இருக்க அதையெல்லாம் அறியாமல் நம் இஸ்லாமிய சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் கேட்பது நம்மை நாமே நாங்கள் பின்தஙகியவர்கள்தான் என்று நம்மை விட மேன்மை இல்லாதவரிடம் சரண் அடைவது போல் உள்ளது நம் சமுதாயம் இந்திய நாட்டில் குறைந்தது 24% உள்ளார்கள் ஆனால் நம்முடைய பிரதிநிதிகள் எத்தனை பேர் உள்ளார்கள் ஒவ்வொரு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அமர்ந்து உள்ளார்கள் என்று சற்று சிந்திக்க வேண்டாமா? நம் சமுதாயம் இன் நாட்டிற்கு இத்தகைய பங்களிப்பு செய்தும் நம்முடைய சமூகத்தில் ஒற்றுமை இல்லாததால் நமக்கு வேண்டிய உரிமையை நம்மால் பெற முடியவில்லை . பெரும்பான்மையான ஹிந்து சமூகத்தில் அவர்கள் பிராமணன், வைய்ஷணவன், சத்திரியன், சூத்திரன் இன்னும் பல பிரிவாக இருந்தாலும் அவன் தேர்தல் என்று வரும் போது அவனுடைய பிரதிநிதியை வைத்து அவனுக்கு வேண்டிய உரிமையை பெற்று கொள்கிறான். ஆனால் நாமோ சிறுபான்மை என்று சொல்லி நம்மில் சிதறுன்டு இருப்பதால் நம்மால் நம்முடைய உரிமையை கேட்டு பெறுவதற்கும் நாம் ஏன் ஒன்று பட கூடாது. நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் நமக்குள் பேசி கொள்ளலாம். காலம் சென்ற பழனி பாபா அவர்கள் சொன்னார் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சட்டமன்ற தொகுதிகளில் இஸ்லாமிய சமுதாயம் அதிகம் வாழும் தொகுதிகளில் உள்ள மற்ற சமுகத்தினரிடம் கலந்து பேசி நீங்கள் அதிகம் உள்ள தொகுதியில் உங்கள் பிரதிநிதிகளையும் நாங்கள் அதிகம் வாழும் தொகுதியில் எங்கள் பிரதிநிதிகளை வெற்றி பெற செய்யுங்கள் என்று முடிவெடுத்தல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரைந்தது நம்முடைய சமுதாய பிரதிநிதிகள் 80க்கு குறையாது இருப்பார்கள் நம் நாட்டிற்கு யார் முதல்வர் ஆக வேண்டும் என்று நாம் முடிவு செய்ய முடியும். இதே முறை படி நம் இந்தியாவில் அனைத்து நாடளுமன்ற தொகுதியிலும் பின் பற்றினால் நம் சமுகத்தினர் 100 நாடளுமன்ற தொகுதியிலும் வெல்ல முடயும் இதை எல்லாம் நம் தலைவர்கள் ஏன் சிந்திப்பதில்லை இனியாவது உங்கள் விறுப்பு வெறுப்பை மறந்து நம்மவர்கள் வளர்ச்சிக்காக பாடு பட்டால் வரும் தலைமுறை நெஞ்சார வாழ்த்தும்.

All Comment

Write Comment


Name
:
Image Upload
:


***************************

Contact With Us